வடக்கு மற்றும் தெற்கு மக்களை ஏமாற்றிய வரலாறு கொண்ட ரணில்
தென்பகுதி மக்களையும், வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் வடக்கு மக்களை இனியும் ரணில் விக்ரமசிங்கவால் ஏமாற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தாமே ஜனாதிபதி வேட்பாளர் என வலுக்கட்டாயமாக ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த ரணில் விக்ரமசிங்க இன்று கூறுகின்றார்.
ஆனால் பொதுஜன பெரமுன ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக இதுவரை தெரிவு செய்யவில்லை. தென்பகுதி மக்களையம் வடபகுதி மக்களையும் ஏமாற்றிய வரலாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உண்டு.
எனவே வடக்கு மக்களை இனியும் அவரால் ஏமாற்ற முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியினால் வெறும் ஒன்றரை லட்சம் வாக்குகளை மாத்திரமே பெற முடியும்.
எனவே இவை அனைத்தும் ஏமாற்று செயற்பாடாகும். மக்களின் நிராகரிப்புக்குள்ளான இவர்களின் அரசியல் பயணத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
 
                                                                                                                                                 
                                                                                                     
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
			         
 
			         
 
			        