India Reply Deputy Ambassador
இலங்கைஅரசியல்செய்திகள்

வடபகுதி மீன்பிடித் தொழில் முற்றாக சரிவடைந்துள்ளது!!

Share

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதரக பதில் துணைத்தூதர் ராம் மகேஷை இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடினர்.

இந்திய இழுவைப்படகுகள் தொடர்பிலான பிரச்சினையைப் பற்றி மகஜர் ஒன்றை கையளிப்பதற்காக இன்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் மருதடி வீதியிலுள்ள இந்திய தூணைத்தூதரகத்துக்குச் சென்றனர்.

அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே, தலைவர் நிஹால் கலப்பத்தி ஆகியோர் இந்திய துணைத்தூதரக பதில் தூணைத்தூதர் ராம் மகேஷை சந்தித்து பேசினர்.

இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டிருந்தார்.

இந்த மகஜரில்,

சுமார் ஒரு தசாப்த காலமாக இலங்கையின் வடபகுதி கடற்பரப்பில் இந்திய மீனவர் ஆக்கிரமிப்பு காரணமாக இலங்கையின் வடபகுதி மீன்பிடித் தொழில் முற்றாக சரிவடைந்துள்ளது.

இந்நிலை காரணமாக வடபகுதி சுமார் ஐம்பதாயிரம் மீனவர்களும், அவர்களுடைய குடும்ப அங்கத்தவர்களான சுமார் இரண்டு இலட்சம் பேரும் முகம்கொடுக்கும்
நிலைமை மிகவும் கவலைகரமானதாகும்.

இந்திய மீனவர்களின் செயற்பாட்டினால் இந்நாட்டு மீனவர்களுக்கும், படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கும் ஏற்படும் அழிவு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

அவர்கள் பயன்படுத்தும் சட்டவிரோத ‘பொட்டம் ரோலிங்’ முறை காரணமாக கடலின் அடிபரப்புச் சூழலுக்கு ஏற்படும் அழிவு பாரியதொன்றாகும்.

இந்நிலமை காரணமாக இந்நாட்டு மீன்பிடித் துறைக்கு ஒரு வருடத்திற்கு சுமார் 1000 மில்லியன் ரூபாயாகும். அத்துடன் கடற் சூழலுக்கு ஏற்படும் அழிவை எடைபோட முடியாது.

இவ்விடயம் குறித்து எமது நாட்டு உரிய பொறுப்பு வாய்ந்தோருக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் அறியத் தந்தாலும், கண்டனங்கள், ஆர்பாட்டங்கள், பேச்சுவார்த்தைகள் நடத்தியிருந்தாலும் ஆக்கபூர்வமான எவ்வித தீர்வையும் பெற்றுக்கொள்ள முடியாமற் சென்றுள்ளது.

இந்நாட்டு வடபகுதி மீன்பிடி தொழிற்துறைக்கும், மீனவர்களுக்கும் ஏற்படுத்தும் இந்த அழிவு தொடர்பாக இந்திய அரசுக்கு எமது கவலையை தெரிவிப்பதோடு, இலங்கை மற்றும் இந்திய அரசுகளின் பொறுப்புவாய்ந்தோர் தலையிட்டு துரிதமாக நிரந்தரமான தீர்வை பெற்றுக்கொடுக்கும் படி வலியுறுத்துகிறோம் எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 7 7
செய்திகள்அரசியல்இலங்கை

நாடு தழுவிய ரீதியில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் இன்று (30) காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்....

images 5 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கழிப்பறை குழிக்குள் விழுந்து 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு: ஆணமடுவவில் சோகம்!

புத்தளம் – ஆணமடுவ பகுதியில் வீட்டிற்கு அருகே நீர் நிறைந்திருந்த கழிப்பறை குழிக்குள் விழுந்து 4...

850202 6773866 fishermens
செய்திகள்இலங்கை

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய இந்திய மீனவர்கள் 3 பேர் கைது: மீன்பிடி படகும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவரை...

1766491507 traffic plan 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் 1,200 பொலிஸார் குவிப்பு! காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து மாற்றங்கள்.

எதிர்வரும் 2026 புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கொழும்பு மற்றும் காலி முகத்திடல் (Galle Face) பகுதிகளில்...