Mahindanatha aluthkamake
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா போன்ற ஒருவரை வரலாற்றில் காண முடியாது!

Share

” கோட்டாபய ராஜபக்ச போன்ற ஒரு அரச தலைவரை வரலாற்றில் இனி கண்டுபிடிக்க முடியாமல்போகும். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள் அது தொடர்பில் கவலையடையும் காலம் வரும்.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசாங்க நிதியில் இருந்து ஒரு சதம்கூட களவாடாத தலைவர்தான் கோட்டாபய ராஜபக்ச. அவரது ஆட்சி காலத்தில் பாதாள குழு வெளியில் தலைகாட்டவில்லை. போராட்டக்களை ஒடுக்க கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் நடத்தவில்லை. ஜனாதிபதிக்கான செலவீனங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தார்.

இப்படியானதொரு அரச தலைவரை இனி கண்டுபிடிப்பது கடினம். கோட்டாபய ராஜபக்சவை பதவி விலக வலியுறுத்தியவர்கள், அந்த முடிவு தொடர்பில் மரணிக்கும் தருவாயிலாவது கவலை அடைவார்கள்.

கோட்டாபய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். இனி அரசியலுக்குள் வரும் எண்ணம் அவருக்கு இல்லை.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...