எந்தவொரு அரசினாலும் நாட்டை நிர்வாகிக்க முடியாதளவுக்கு நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை நேற்று (15) சந்தித்துக் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்;
நிலையான கொள்கை இல்லாமையே இந்த நெருக்கடிக்குப் பிரதான காரணமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே ஒருவேளை ஆட்சி மாறினாலும், தேசியக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவாறு நாட்டை வலுப்படுத்த வேண்டும். தற்போதைய நெருக்கடியால் நிலையால் மக்கள் வெறுப்புணர்வுடன் இருக்கின்றனர் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
Leave a comment