காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஆராயத் தேவையில்லை!! – ஜனாதிபதி!
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்ன காரணத்துக்காக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை ஆராயத் தேவையில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என நீதி அமைச்சர் அலி சப்ரி
தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஒருவர் எத்தகைய சூழலில் காணாமல் ஆக்கப்பட்டார் என்பதைப் பார்க்காது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அனைவரும் இலங்கை பிரஜை என்பதை மனதில் வைத்து, இவ்வாறான சம்பவம் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார் என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
Leave a comment