இலங்கை தொடர்ந்தும் சர்வதேச நாணய நிதியத்தை நாடவேண்டிய அவசியமில்லையென, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனியார் (Bloomberg) தொலைக்காட்சிச் சேவை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பின்றி, வெளிநாட்டுக் கடனை மீளச் செலுத்தும் முறைமையை முகாமைத்துவப்படுத்த, இலங்கைக்கு இன்னும் வாய்ப்புள்ளது.
எதிர்காலத்தில் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்கத்தை வலுப்படுத்துவதற்காக, பல துறைகளில் நிதி வழங்கல்களை மேற்கொள்ளவுள்ளோம். – எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment