ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் நகல்வடிவம் அவசியமற்றது என்பதுடன் பிளவுபடுத்தும் தன்மையை கொண்டதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டாலும் இலங்கை அதனை எதிர்க்குமெனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
” நாங்கள் பிளவுபடுத்தும் எந்த பொறிமுறையையும் இந்த தருணத்தில் விரும்பவில்லை. எங்களுக்கு சர்வதேச சமூகத்தின் ஆதரவே அவசியம்.
தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமை.
இலங்கையரென்ற அடிப்படையில் பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் உள்நாட்டு பொறிமுறை மூலம் உருவாக்குவது எங்களது கடமையாகும். அதற்கு அப்பால்பட்ட எதுவும் எந்த சர்வதேச பொறிமுறையும் எங்கள் அரசமைப்பை மீறும் வகையில் அமையும்.
போதிய ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாங்கள் இந்த தீர்மானத்தை எதிர்ப்போம். ஏனென்றால் எங்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.” எனவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.
#tSriLankaNews
Leave a comment