maithripala sirisena
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவுடன் இனி எந்த உறவும் கிடையாது! – நாம் மக்கள் பக்கமே என்கிறார் மைத்திரி

Share

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுடன் எமக்கு இனி எவ்வித உறவும் கிடையாது. ராஜபக்சக்கள் வேண்டாம் என போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவிப்பு விடுத்தார்.

” அரசுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் சாந்த பண்டார என்னிடம் எதுவும் கலந்துரையாடவில்லை. ஏன்! தொலைபேசி வாயிலாகக்கூட உரையாற்றவில்லை. தனது அரசியல் வாழ்க்கையை அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மூழ்கும் கப்பலில் ஏறியுள்ளார்.

ராஜபக்சக்களுடன் எமக்கு இனி தொடர்பு – உறவு கிடையாது. கடிதம் அனுப்பினோம், யோசனைகளை முன்வைத்தோம். ஆனால் மாறுவதாக தெரியவில்லை.

எனவே, ராஜபக்சக்களை வெளியேற கோரி போராடும் மக்கள் பக்கம்தான் நாம் நிற்கின்றோம். ” – என்றும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...