Fuel Price 780x436 1
இலங்கைசெய்திகள்

கியூஆர் முறைமைக்கு மட்டுமே இனி எரிபொருள்!

Share

ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர கியூஆர் முறைமை மட்டுமே செயற்படுத்தப்படும் என வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்ட விரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை 0742123123 என்ற வட்சப் எண்ணுக்கு அனுப்பலாம் என்றும் அவர்கள் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்டால், அவர்களின் கியூஆர் குறியீடு செல்லுபடி அற்றதாக்கப்படும் என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சேஸ் எண்ணின் மூலம் கியூஆர் முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகனங்கள் வாகன ஆண்டு வருமான அனுமதிப்பத்திர இலக்கத்தைக் கொண்டு பதிவு செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து ஓட்டோக்களும் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்து, அவற்றுக்கு ஒதுக்கப்படும் அருகிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் விவரங்களை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தேவைப்படும் உபகரணங்களின் உரிமையாளர்கள் தங்களது பிரதேச செயலகத்தில் எரிபொருளைப் பெறுவதை நோக்கமாகக் கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நிரப்பு நிலையத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொதுப் போக்குவரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் அதே வேளையில், பஸ்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு, அவற்றின் வழித்தட அனுமதி மற்றும் பயணித்த கிலோமீற்றர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தீர்மானிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை போக்குவரத்து சேவைகள், ஊழியர் போக்குவரத்து, கைத்தொழில்கள், சுற்றுலா தொடர்பான வாகனங்கள், அம்பியூலன்ஸ்கள் மற்றும் ஏனைய அங்கீகரிக்கப்பட்ட சேவைகளுக்கு தேவையான அனைத்து எரிபொருளையும் போக்குவரத்து சபை டிப்போ வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அம்பியூலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், அவற்றுக்கு வரையறையற்ற எரிபொருள் வழங்கவும் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழ் மக்கள் பேரவை – ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் ‘கொள்கைக் கூட்டு’ முடிவுக்கு வருகிறது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிரெதிராக தனித்தனியே எதிர்கொண்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்கு சின்னத்தில்...

25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...