பல துறைகளின் வழமையான சேவை நடவடிக்கைகளை நேற்று (24) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், நாட்டில் ஏற்பட்ட கொவிட் தொற்றால் நாடு முடக்கப்பட்ட நிலையில் அனைத்து நிகழ்வுகளும் தடைசெய்யப்பட்டிருந்தது. ஓரளவு வழமைக்கு திரும்பியிருக்கும் நிலையில் இனி வழமையாக நிறுவனங்களின் சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கிலேயே இச்செயற்பாடு ஆரம்பிக்கப்படுகிறது.
குறிப்பாக திருமணங்கள், உணவகங்கள், பெரிய அளவிலான ஹோட்டல்கள் மற்றும் சினிமாக்கள், நிகழ்வு முகாமைத்துவம் எனப்படும் குழுக்களுக்கும் இயங்க அனுமதிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
#SriLankaNews
3 Comments