rtjy 44 scaled
இலங்கைசெய்திகள்

சனல் – 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆடத் தேவையில்லை

Share

சனல் – 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆடத் தேவையில்லை

சனல் – 4 ஊடகத்திற்கு தேவையானவாறு நாம் ஆட வேண்டியதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கோட்டை சம்புத்தாலோக்க விகாரைக்கு இன்று(04.10.2023) சென்றிருந்த மகிந்த ராஜபக்சவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்குலக ஊடகங்களுக்கு கடுந்தொனியில் பேசியதனை வரவேற்பதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் என்றைக்குமே மக்களின் பக்கம் இருப்பதாகவும் மக்கள் துன்பத்தில் வாழ்வதின் காரணத்தினால் அவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென கோருவதாகவும் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

” தற்போதைய ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க முடியும். எனினும் அதனை பலவந்தமாக செய்ய முடியாது.

மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது குறித்து ஜனாதிபதி ஆலோசனை கோரினால் அதனை வழங்கத் நான் தயார்.

தாம் ஆட்சி செய்தது போதும். தற்பொழுது புதிய தலைமைத்துவம் உருவாக வேண்டும். எனக்கு மீண்டும் ஆட்சிக்கு வரும் உத்தேசமில்லை” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...