மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அமையவில்லை – என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்தார்.
சட்டத்தரணிகள் சங்கத்தில் இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
” நாட்டில் ‘சிஸ்டம் சேஜ்’சையே மக்கள் கோருகின்றனர். அதற்கான ஏற்பாடு அரசால் முன்வைக்கப்பட்டுள்ள 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் இல்லை என்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவின் கருத்தாக இருக்கின்றது.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரசியல் மற்றும் பொருளாதார உறுதிப்பாட்டை ஏற்படுத்த வேண்டுமெனில் 22 ஆவது திருத்தச்சட்டமூலம், திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் சாலிய பீரிஸ் வலியுறுத்தினார்.
அதேவேளை, அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை என பிரதான எதிர்க்கட்சிகளும் அறிவித்துள்ளன.
#SriLankaNews
Leave a comment