கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கும் இடையிலான இரவு நேர தபால் ரயில் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 10 திகதி முதல் ஆரம்பிக்கவிருந்த நிலையில் அன்று 10 மற்றும் 11 ஆம் திகதி விசேட ரயில் சேவையாக இடம்பெற்றது. இவ்வாறான நிலையில் 19 ஆம் திகதி முதல் தினசரி சேவையாக இரவு நேர தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை அதிகாலை 5.29 மணிக்கு வந்தடைவதுடன் காங்கேசன்துறையை அதிகாலை 6.17 க்கு சென்றடையும்.
காங்கேசன்துறையில் இருந்து இரவு 6.00 மணிக்கு புறப்படும் ரயில் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை 6.45 மணிக்கு சென்றடைவதுடன் 7.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை அதிகாலை 4.00 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் locomotive இன்ஜினுடன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ICF ரயில் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது. குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 2 ஆம் வகுப்பு பெட்டிகள், 3 ஆம் வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்படுவதுடன் மேலதிகமாக இதுவரை காலமும் இல்லாதிருந்த உறங்கல் படுக்கை(Berth) வசதி பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகள் இருக்கை முன்பதிவு வசதியும் செய்யமுடியும்.
#SriLankaNews
Leave a comment