10 10
இலங்கைசெய்திகள்

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

Share

முரண்படும் தேர்தல் கருத்துக்கணிப்புகள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையகம் வெளியிட்ட தகவல்

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது தொடர்பில் கருத்துக்கணிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் இந்த கருத்துக்கணிப்புக்களை தேர்தல்கள் ஆணையகம் எதிர்க்கிறது இந்தநிலையில், ஹெலகுரு (Helakuru) மற்றும் இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி (IHP) ஆகியவை கருத்துக்கணிப்புக்களை மேற்கொண்டு வருகின்றன.

ஹெலகுரு என்பது ஒரு பிரபலமான சிங்கள மொழி செயலியாகும். இந்த செயலியின் கணிப்பின்படி அநுரகுமார திசாநாயக்கவுக்கு 80வீத வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டிடியூட் ஃபோர் ஹெல்த் பொலிசி, அநுரகுமாரவுக்கு 37 வீத வெற்றி கிடைக்கும் என்றும் சஜித் பிரேமதாசவுக்கு 36 வீத வெற்றி கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.

இருப்பினும், கடைசி நிமிட அரசியல் மாற்றங்களைக் கணக்கிட இயலாமை காரணமாக இந்த கருத்துக்கணிப்புக்களை விமர்சகர்கள் நிராகரித்துள்ளனர்.

குறிப்பாக ஹெலகுரு செயலிக்கு 30ஆயிரம் பேர் தமது கருத்துக்களை கூறினாலும், அதில் பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஹெலகுரு தங்கள் செயலியின் பயனர்களை நம்பியிருப்பதால், கருத்துக்கணிப்பில் பங்கேற்றவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர் என்ற விடயமும் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இந்த கருத்துக் கணிப்புகள், தேர்தலில் ஒரு செயற்கையான தலையீடு என்று தேர்தல்கள் ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...