நாடளாவிய ரீதியில் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையதளம் மூலமாகப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தடைப்பட்டுள்ளது.
இணையதளம் மூலமாக இதனைப்பெறுவோரின் எண்ணிக்கை உயர்வடைந்தமையைத் தொடர்ந்து, இச் செயற்பாடானது தடைப்பட்டுள்ளது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் மாகாண காரியாலயங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் தொழில்நுட்பப் பிரிவினர் இந்த நிலைமை வழமைக்குக் கொண்டு வருவதற்குத் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாடு முழுவதும் வாகன வருமான அனுமதிப் பத்திரத்தை இணையம் ஊடாக பெற்றுக் கொள்ளும் செயற்பாடு தடைப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்துள்ளன.
இதற்கு முன்னர் நாளாந்தம் இணையம் ஊடாக குறித்த வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு 30 பேர் பிரவேசித்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 60 ஆயிரமாக அதிகரித்தமையின் பின்னணியில் இந்நடைமுறையானது தடைப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment