கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக இலங்கையர்களுக்கு நான்காவது தடுப்பூசியை ஏற்றுவது தொடர்பில் இன்னும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.” – என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று தெரிவித்தார்.
” நாட்டில் தற்போதுதான் மக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்பட்டுவருகின்றது. அந்த பணி இன்னும் முடிவடையவில்லை. எனவே, 4ஆவது தடுப்பூசி தொடர்பில் தற்போது முவெடுக்க முடியாது.
கிடைக்கப்பெறும் தரவுகளை அடிப்படையாகக்கொண்டே, அது தொடர்பான பரிந்துரையை நிபுணர்குழு முன்வைக்கும். இன்னும் அவ்வாறானதொரு பரிந்துரை முன்வைக்கப்படவில்லை. தேவையேற்படும் பட்சத்தில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.” எனவும் விசேட வைத்தியர் குறிப்பிட்டார்.
#SrilankaNews