மத்திய வங்கி நாணய சபைக்கு புதிய செயலாளர்!
இலங்கை மத்திய வங்கி நாணய சபையின் புதிய செயலாளராக உதவி ஆளுநர் ஜே.பி.ஆர் கருணாரத்ன நியமிக்கப்படவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
செப்டெம்பர் 15 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில், நாணய சபையின் செயலாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இவர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA) சக உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர்களின் (CMA) இணை உறுப்பினருமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a comment