மாதுளையால் இலங்கைக்கு மகிழ்ச்சி செய்தி
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வைத் தொடர்ந்து, இலங்கையில் வெற்றிகரமாக பயிரிடக்கூடிய அதிக விளைச்சலைத் தரும் இரண்டு புதிய மாதுளை வகைகளை விவசாயத் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
இரண்டு புதிய மாதுளை வகைகளும் இலங்கையில் பயிரிடுவதற்கு ஏற்றது என்றும், அது தொடர்பான தமது முயற்சிகள் வெற்றியடைந்துள்ளதாகவும் ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
அதிக விளைச்சல் தர வல்ல மற்றும் மிகவும் இனிப்புடன் கூடிய இவ்விரு வகையும் அடுத்த சில மாதங்களில் இலங்கையில் பயிர்ச்செய்கைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளன.
இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து பெருமளவிலான மாதுளை மற்றும் விதைகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதன் காரணமான ஆண்டுதோறும் பெருமளவு அந்நியச் செலாவணியை அராங்கம் இழக்கிறது. இந்நிலைமையை தவிர்க்கும் நோக்கில் விவசாயத் திணைக்களத்தினால் இரண்டு புதிய மாதுளை வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
உலர் வலயங்களில் பயிரிடக்கூடிய இந்த இரண்டு புதிய வகை மாதுளைகளும் தற்போது நுரைச்சோலை மற்றும் வீரவில விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகளில் பயிரிடப்பட்டு வெற்றியடைந்துள்ளதாக விவசாய திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.