கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவைக்கான புதிய தொடரூந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை 5.10 மணிக்கு கல்கிசையிலிருந்து சேவையை ஆரம்பித்த தொடருந்து நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிலையில், அங்கிருந்து காங்கேசன்துறை ரயில் நிலையத்துக்கு பயணத்தைத் தொடர்ந்தது.
காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு மீண்டும் தனது சேவையை ஆரம்பித்த குறித்த தொடரூந்து சேவை யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திலிருந்து சேவையை ஆரம்பித்து கொழும்பை இரவு 8 மணிக்கு சென்றடையும்.
இதுவரை காலமும் 5 குளிரூட்டப்பட்ட பெட்டிகளுடன் சேவையில் ஈடுபட்ட இந்த நகர்சேர் கடுகதி சேவை தற்போது மேலதிகமாக 3 பெட்டிகளை இணைத்து 8 பெட்டிகளுடன் சேவையில் ஈடுபடவுள்ளது. இதன்மூலம் பயணிகளின் எண்ணிக்கை 360ஆக அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனது முதலாவது சேவையில் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட பிரதேச போக்குவரத்து அதிகாரியை யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் வரவேற்றார்.
#SriLankaNews
Leave a comment