22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

Share

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 35 இடை மாறல்கள் மற்றும் 119 வௌியேறும் வாயில்களில் இன்று முதல் குறித்த சேவை வசதிகள் செயற்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை அறிவித்துள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் வெளியேறும் வாயில்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் திறமையான போக்குவரத்து சேவையை நிறுவுவதற்கும், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாகவும் வேகமாகவும் மாற்றுவதற்கும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்தின்படி இது ஆரம்பிக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

21 14
இலங்கைசெய்திகள்

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சபாநாயகரின் செயற்பாடுகள்!

நாடாளுமன்றில், அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுவதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அனுமதி மறுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....