யாழ்ப்பாணம் புதிய கட்டளைத் தளபதி மதத் தலைவர்களைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.
யாழ். பாதுகாப்பு படைகளின் புதிய கட்டளைத் தளபதியாக கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்ட மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா சிரேஸ்ட அதிகாரி,
யாழ் ஸ்ரீ நாகவிகாரை விகாராதிபதி வணக்கத்திற்குரிய சாஸ்த்திரவேதி மீஹகஜதுரே சிறிவிமல தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அத்துடன் யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி அருட்தந்தை ஜஸ்ரின் பீ ஞானப்பிரகாசம் மற்றும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோரை 2021 டிசெம்பர் மாதம் 28 அன்று சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.
#SrilankaNews