” அடுத்தவாரம் அமைச்சரவை நியமிக்கப்படும்.” – என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
நாட்டில் அமைச்சர்கள் இல்லை என எதிரணிகள் சுட்டிக்காட்டிய விடயத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரமே செயற்படுகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews