நாளை மறுதினம் புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட பஸ் கட்டண விபரம் வெளியாகியுள்ளது.
இதன்படி புதிய பஸ் கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில், அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணமும் அதிரிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகரிப்பின்படி கொழும்பில் இருந்து கதிர்காமம் வரையான பஸ் கட்டணம் ஆயிரத்து 210 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மாத்தறையில் இருந்து கண்டி வரையான கட்டணம் ஆயிரத்து 60 ரூபாவாகவும் கொழும்பில் இருந்து மாத்தறை வரையான கட்டணம் 670 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment