புதிய அரசியல் கூட்டணியின் பெயர், சின்னம் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கூட்டணி கட்சிகளின் விசேட கூட்டத்தின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் திட்டம் தமது கூட்டணிக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ரஷ்யாவுடன் பேச்சு நடத்தப்படும் எனவும் விமல் வீரவன்ச கூறினார்.
#SriLankaNews
Leave a comment