சம்பிக்க தலைமையில் புதிய கூட்டணி!

Champika Ranawaka

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து வெளியேறியுள்ள சம்பிக்க ரணவக்க, பரந்தபட்ட அரசியல் கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

43 ஆம் படையணி எனும் இயக்கத்தை கட்டியெழுப்பி, ஆரம்பத்தில் புத்திஜீவிகளை உள்வாங்கிய சம்பிக்க ரணவக்க, தற்போது அரசியல் பிரமுகர்களையும் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதற்கான பேச்சுகள் தற்போது வெற்றிகரமாக இடம்பெற்றுவருகின்றன என்று கட்சி பிரமுகர் ஒருவர் தகவல் வெளியிட்டார்.

2024 இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்தே, சம்பிக்க இவ்வாறான நகர்வில் இறங்கியுள்ளார் என அரசியல் களத்தில் கதை அடிபடுகின்றது.

#SriLankaNews

Exit mobile version