“நெதுன்கமுவ ராஜா” என்ற தந்த யானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த யானை நாட்டில் பிரதான வணக்கத்தலங்கள் பலவற்றில் பெரஹரா உற்சவங்களில் கலந்துகொண்டுள்ளது.
2005 தொடக்கம் 2021 ஆம் ஆண்டு வரை 13 தடவைகள் ஸ்ரீ தலதா மாளிகை பெரஹராவின் புனித பேழையை தாங்கி உற்சவ வீதி உலா சென்ற மங்கலகரமான தந்தயானை “நெதுன்கமுவ ராஜா” 07.03.2022 அன்று உயிரிழந்துள்ளது.
தற்போது குறித்த தந்த யானையின் இறந்த உடலைப் பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது நாட்டின் கலாசார வைபவங்களில் வழங்கிய ஒத்துழைப்புக்களை கருத்தில் கொண்டு “நெதுன்கமுவ ராஜா” எனும் தந்தயானையை தேசிய உடைமையாக பிரகடனப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
#SriLankaNews
Leave a comment