ranil 2
இலங்கைசெய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வியில் – போராட்டத்துக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்

Share

ஜனாதிபதி மற்றும் தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் ஜனவரி மாதம் முதல் 36 சதவீதம்  வரை வரி அறவிடும் கொள்கைக்கு எதிராக தொழில் வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலேயே,  நேற்று மாலை அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன் போது , நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியது அத்தியாவசியமானது எனவும், அவர்களது சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்றும் திறைசேரி செயலாளர், ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அவர்கள் கூறுவதைப் போன்று வரி வசூலிப்பானது அசாதாரணமாகக் காணப்பட்டால் அதனை  ஏற்றுக் கொள்ள முடியாது என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...