காங்கேசன்துறைக்கு கொழும்பில் இருந்து ரயில் மூலம் வடக்கிற்கு தேவையான எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை முன்வைத்தார்.
நேற்றைய தினம் வலு சக்தி மற்றும் மின் சக்தி அமைச்சுக்களின் குழுநிலை விவாதத்தின் போதே இவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
கொழும்பிலிருந்து பவுசர் மூலமாகவே வடக்கிற்கு தேவையான எரிபொருள்கள் காங்கேசன்துறைக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதன் காரணமாக தாமதங்களும் வீண் செலவுகளும் ஏற்படுகின்றன. ரயில் மூலமாக நேரடியாக காங்கேசன்துறைக்கு எரிபொருள் விநியோகிக்கப்படுவதால் காலதாமதமும், செலவும் குறைக்கப்படுகின்றன.
எரிபொருள் விலையின் தொடர் அதிகரிப்பு மக்களுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளது. எரிபொருளின் விலை அதிகரிக்காது இருக்க அரசு நிவாரணங்களை அமைச்சுக்கு வழங்குவதன் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#SriLankaNews
Leave a comment