” இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கை தொடர்பில் அடுத்த வாரமே நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
” மத்திய வங்கி ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் பதவியேற்று பல மாதங்கள் ஆகின்றன. எனினும், நெருக்கடியான நிலையில் இருந்து மீள அவரால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் இன்று அமுல்படுத்தப்படவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு மத்திய வங்கி ஆளுநர் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றார். ஆனால் நாடும் நிலைப்பாட்டில் அரசு உள்ளது. எனவே, ஆளுநர் எவ்வாறு தன்னிச்சையாக செயற்பட முடியும்?
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைமீது உடனடியாக விவாதம் நடத்தப்பட வேண்டும். அடுத்தவாரமே எமக்கு விவாதம் அவசியம்.” – என்றும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment