நெடுந்தீவில் நேற்றைய தினம் (ஏப்ரல் 22) கொலை செய்யப்பட்ட ஐந்து பேரில் நாகநாதி பாலசிங்கம் மற்றும் அவரது மனைவியான பாலசிங்கம் கண்மணியம்மா பூமணி ஆகியோரது சடலங்கள் இன்றைய தினம்(ஏப்ரல் 23) அவரது உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
இவர்களது சடலங்கள் இன்று இரவு கொக்குவில் பகுதியிலுள்ள பிரம்படி ஒழுங்கையிலுள்ள உறவினர் ஒருவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளன.
#SriLankaNews
2 Comments