20220501 071432 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கடற்தொழிலாளி படகு மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கடற்படை – நள்ளிரவில் சம்பவம்

Share

கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் ஒருவரின் படகு மீது வடமராட்சி கடற்பரப்பில்கடற்படையினரின் படகு மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் கடற்தொழிலாளிகள் இருவர் உயிர் தப்பியதுடன், சங்கத் தலைவரின் படகு மற்றும் இயந்திரம் மீளப் பயன்படுத்த முடியாதவாறு சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை சுப்பர்மடம் கடற்தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தேவராசா தேவகுமார் என்பவரது படகே சேதமடைந்துள்ளது.

படகு சேதடைந்ததால் நடுக்கடலில் தத்தளித்த கடற்தொழிலாளிகள் இருவரையும் சில நிமிடங்கள் கழித்து கடற்படையினர் படகுடன் இழுத்து வந்து கரை சேர்த்துள்ளனர்.

தமது படகு மீது கடற்படையின் அதிவேகப் படகு ஏறிச் சென்றது என்று கடற்தொழிலாளர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

20220501 071505 20220501 071128

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...