நாடு பூராகவும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பம்!

Protest L

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரிக் கொள்கை உள்ளிட்ட தற்போதைய நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (09) முதல் பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக கலாநிதி சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு தமது ஆதரவை தெரிவிக்கும் என அதன் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதன் மூலம் நாட்டின் நெருக்கடி நிலை மேலும் அதிகரிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் கலாநிதி பிரியந்த துனுசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version