நாடு பூராகவும் அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுவரும் ஹர்த்தாலின் தாக்கம் யாழ்ப்பாண மாவட்டத்திலும் அவதானிக்கப்பட்டுள்ளது.
யாழ் நகரில் வர்த்தக நிலையங்கள் பெரும்பாலும் மூடப்பட்டுள்ளதோடு உணவகங்கள், மருந்தகங்கள் வழமை போன்று இயங்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. பொதுச் சந்தை நடவடிக்கைகள் செயலிழந்து காணப்படுகின்றன.
தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை என்பதுடன் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சேவைகள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபடுகின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
யாழ் நகர்ப்பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைவடைந்து காணப்படுகின்றதையும் அவதானிக்கமுடிகின்றது.
#SriLankaNews
Leave a comment