“நாட்டு வளங்களைப் பாதுகாப்போம் என மார்தட்டி ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தற்போது நாட்டு வளங்களை விற்பனை செய்துவருகின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று குற்றஞ்சாட்டினார்.
திருகோணமலை எண்ணெய் குதங்கள் தொடர்பான ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
” நாட்டு வளங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது, விற்பனை செய்யப்பட்டுள்ள வளங்கள்கூட மீளப்பெறப்படும் என ஆட்சியாளர்கள் சூளுரைத்தனர். தற்போது அந்த வாக்குறுதி மீறப்பட்டுள்ளது.
தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எமது வருங்கால சந்ததியினருக்கு ஒரு அங்குலமேனும் மிகுதி இருக்குமா என தெரியவில்லை.” – என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
#SriLankaNews
8 Comments