“தேசிய அரசு ஒன்று வந்தால் அதில் நாங்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் எவையும் இல்லை. அவ்வாறான ஒரு தேவை ஏதும் இப்போது இருக்கின்றது எனவும் நாங்கள் கருதவில்லை.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அரசு தானே முன்வர வேண்டும் எனத் தாம் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆலோசனை கூறினார் என்ற தகவலையும் அவர் அங்கு வெளியிட்டார்.
#SriLankaNews
Leave a comment