நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில், சவால்களுக்கு முகங்கொடுப்பதற்காக தேசிய அரசொன்றை அமைப்பது தொடர்பில் அரசு ஆராய்ந்துவருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இது தொடர்பில் ஆளுந்தரப்பு தீவிரமாக பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளான ஈபிடிபி, பிள்ளையானிக் கட்சி, தேசிய காங்கிரஸ், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பன தற்போது அரசுக்கு ஆதரவு வழங்கிவருகின்றன. முஸ்லிம் தேசியக் கூட்டணியும் மறைமுக ஆதரவை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளையும் இணைத்து தேசிய அரசை அமைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
தேசிய அரசமைக்கும் திட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே எதிர்ப்பை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment