dinesh gunawardena 1
அரசியல்இலங்கைசெய்திகள்

அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கி தேசிய சபை!

Share

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய சபையை ஸ்தாபிப்பதற்கான வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன கட்சித் தலைவர்களிடம் முன்வைத்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்திலேயே அவர் இதனை முன்வைத்தார்.

நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் யோசனை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இங்கு கட்சித் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன், நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகளின் பொது உடன்படிக்கையின் மூலம் அரசியல் தீர்மானங்களை வழிநடத்துவதே இதன் நோக்கமாக இருக்க வேண்டும் என கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.

தேசிய சபை மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் குறித்த அரசாங்கத்தின் வரைவு யோசனை தொடர்பில் அந்தந்த கட்சிகளின் நிலைப்பாட்டை எழுத்து மூலம் பெற்றுக்கொள்வது என்றும் இங்கு தீர்மானிக்கப்பட்டது. இந்தக் கருத்துக்களுடன் மெருகூட்டப்பட்ட வரைபை பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன் வைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

17 துறைசார் மேற்பார்வை குழுக்கள் மற்றும் 12 நிலையான குழுக்களுக்கு மேலதிகமாக மூன்று குழுக்களை அமைப்பது தொடர்பான அரசாங்கத்தின் பிரேரணையும் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, சுயாதீனமானவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஈ.பி.டி.பி, தேசிய காங்கிரஸ் போன்ற பாராளுமன்றத்தைப் பிரதிநிதப்படுத்தும் கட்சிகளின் குழுத் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...