rtjy 124 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

ராஜபக்சர்களின் அடுத்தகட்ட திட்டம்: நாமல் வீட்டில் மந்திராலோசனை

Share

ராஜபக்சர்களின் அடுத்தகட்ட திட்டம்: நாமல் வீட்டில் மந்திராலோசனை

அடுத்த ஜனாதிபதி தேர்தலை விட பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அண்மையில் மலலசேகர மாவத்தையிலுள்ள நாமல் ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்ற அரசியல் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுஜன பெரமுனு ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் பெயர் முன்வைக்கப்பட்டமை குறித்து விவாதிக்கப்பட்டது.

தம்மிக பெரேரா ஏன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நமலிடம் கேள்வி எழுப்பியுள்ளார். நாமல் இந்த கேள்வியை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டார்.

“முதலில் கட்சியை உருவாக்க வேண்டும். ஜனாதிபதி தேர்தலுக்கு அல்ல எந்த தேர்தலுக்கும் வருவதற்கு கட்சி தயாராக உள்ளது. ஏனெனில் நான் சவால்களை ஏற்றுக்கொள்ளும் ஒருவர் என நாமல் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்யிட எமது கட்சியின் சார்பில் நான்கு வேட்பாளர்கள் உள்ளனர். நானும் பசில் ராஜபக்ஷவும் விண்ணப்பிக்க தீர்மானித்தால் ஆறு பேர் போட்டியிடுவார்கள் என நாமல் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...