இலங்கையும், சீனாவும் நீண்டகால நண்பர்களாக இருந்து வருவதால், இரண்டு தரப்புக்கும் நன்மைகள் கிடைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் இலங்கை – சீன நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்களான 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு சீனா சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சீனாவின் அரசாங்கம் நடத்தும் செய்தி ஊடகமான – ஜிஜிடிஎன்க்கு நாமல் ராஜபக்ச தமது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதன்போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இக்கட்டான காலங்களில் இலங்கைக்கு சீனா துணை நின்றது, அதே போன்று இலங்கையும் எப்போதும் ஒரே சீன கொள்கையை கடைபிடித்து வருகிறது என்று அவர் இதன்போது கூறியுள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் இலங்கை ஜனாதிபதி, சீனாவுக்கு விஜயம் செய்வார் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் ‘கடன் பொறி இராஜதந்திரம்’ குறித்து கருத்துரைத்த நாமல் ராஜபக்ச, இலங்கை கடந்த இரண்டு தசாப்தங்களாக புவிசார் அரசியலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
Leave a comment