தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கிறார் நாமல்! – சிறைக்கு இன்று விஜயம்
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமலுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்தே குறித்த தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட நாமல் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அநுராதபுரம் சிறைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மண்டியிட வைத்து கொலைமிரட்டல் விடுத்தார் என்ற தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் அவர் மீது பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்ட கடும் கண்டனங்களுக்கு அமைய இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து லொஹான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார்.
இந்தநிலையில், தமது பாதுகாப்பின்மை தொடர்பில் தெளிவுபடுத்த அமைச்சர் நாமலுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகள் கோரியுள்ளனர்.
கைதிகளின் இந்த கோரிக்கைக்கு அமைய அநுராதபுரம் சிறைக்கு தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்கும் நோக்கில் நாமல் ராஜபக்ச விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment