இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று யாழ். மாவட்டத்துக்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நாமல் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் கண்காணித்து அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே அவரது யாழுக்கான விஜயம் அமைந்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை.
Leave a comment