சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கும், அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
பிரதமர் பதவிக்காகவே இந்த மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் ஆளுங்கட்சி இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன எனவும் கூறப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் சில சம்பவங்களும் அரசுக்குள் இடம்பெற்றுவந்தன. இரு வேறு இடங்களில் ஊடக சந்திப்புகள்கூட நடத்தப்பட்டன.
ஆனால் பஸிலும், நாமலும் சிறந்த புரிந்துணர்வுடனேயே இருப்பதாகவும், இருவரும் தினமும் சந்தித்து திட்டங்களை வகுத்துவருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சிலவேளை அரசுக்குள் இருக்கும் கறுப்பாடுகளைக் கண்டறிவதற்காக ராஜபக்ச குடும்பம் தரப்பில் இவ்வாறானதொரு அரசியல் வியூகம் கடைபிடிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
#SriLankaNews
Leave a comment