வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்றைய தினம் காலை 10மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இன்று காலை 9மணி முதல் பூர்வாங்க கிரியைகள் ஆரம்பமாகி, காலை 10 மணிக்கு அந்தண சிவாச்சாரியர்களின் வேத மந்திரங்கள் இசைக்க தவில் நாதஸ்வரம் ஒலிக்க, பக்தர்களின் அரோகரா கோசத்துடன் கொடியேற்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவம் இடம்பெறவுள்ளதுடன் மஞ்சத்திருவிழா எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளது. எதிர்வரும் 18 ஆம் அருணகிரிநாதர் உற்சவமும், 19ஆம் கார்த்திகை உற்சவமும் 24 ஆம் திகதி மாலை சப்பறத்திருவிழாவும், 25 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 26 ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் இடம்பெற்று அன்றையதினம் மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.
#SriLankaNews
Leave a comment