நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலையை பாா்வையிட்டார் டக்ளஸ்!

VideoCapture 20230415 211117
யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனின் சிலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பார்வையிட்டார்.
பண்ணை பகுதியில் இன்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று விட்டே குறித்த சிலையை அமைச்சர் பார்வையிட்டார்.
நாகபூசணி அம்மனின் சிலை வியாழக்கிழமை இரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், அம்மனின் சிலைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை உருத்திரசேனை அமைப்பால் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ஒவ்வொருவருடைய மத உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும் அது ஏனைய மதங்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும் என்றார்.
#srilankaNews
Exit mobile version