tamilni 50 scaled
இலங்கைசெய்திகள்

ஹோமாகம பிரதேசத்தில் மர்ம பொருள்

Share

ஹோமாகம பிரதேசத்தில் மர்ம பொருள்

ஹோமாகம கட்டுவன கைத்தொழில் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென வெள்ளை நிற பஞ்சு போன்ற மர்ம பொருள் வெளியேறி பிரதேச முழுவதும் பரவியுள்ளது.

இதனால் சுற்றாடல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அண்மையில் தீப்பிடித்த கட்டுவான தொழிற்சாலை பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட இரசாயன திரவம் நீரில் கலந்துள்ளதனால் இவ்வாறு உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

ஹோமாகம பிரதேசத்தில் மர்ம பொருள்: குழப்பத்தில் மக்கள் | Mysterious Object In Homagama Territory

இது முதலில் பஞ்சு உருண்டையாகத் தெரிந்தாலும், காற்றினால் அடித்துச் செல்லப்பட்டு சுற்றுப்புறச் சூழல் முழுவதும் பரவும் நுரை போன்று காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

இது வழமைக்கு மாறான நிகழ்வு எனவும், அவை உடலில் பட்டால் அரிப்பு ஏற்படுவதாகவும், இதனை பார்க்க வந்த ஒருவர் வீட்டிற்கு சென்று வாந்தி எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுதவிர, இவை அப்பகுதியின் குடிநீரில் கலந்தால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளை சந்திக்க நேரிடும் என விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share
தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...