இலங்கைசெய்திகள்

இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை

24 660c97445c41b
Share

இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படகிறது.

murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka

மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.

குறித்த மூவரும், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka

4P996

 

இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும் அவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.’

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை(Sri Lanka)நோக்கி பயணிக்கவுள்ளதாக, அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள(India) இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருக்கும் இலங்கையர்களுக்கு கடவுசீட்டு வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்ட இந்த மூவருக்கும் ஒருவழி கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அங்கிருந்தும் கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை வந்தவுடன் அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடன் இலங்கையின் பயங்கரவாத தகவல் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அதற்கான ஏற்பாட்டினை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், இவர்களின் உடல் பாகங்கள் செயலிழக்கும் வகையில் இந்தியா அரசினால் மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதன் மூலம் அவர்கள் ஒரு வருடத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...