மாளிகாவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 24 வயதுடைய நபர் ஒருவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்ற குழு, அவரை கடுமையாகத் தாக்கி கொலை செய்துள்ளனர் என தெமட்டகொட பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
தெமட்டகொட லக் ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இந்த இளைஞனை ஒரு குழுவினர் விசாரணை செய்யவிருப்பதாக கூறி கடத்தியதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடத்தப்பட்ட இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு, அன்றைய தினம் ஏழு மணியளவில் அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு முன்பாக விடப்பட்டுள்ளார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெமட்டகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#SriLankaNews
Leave a comment