fff 1 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருகோணமலையில் பல்லின கலை இலக்கிய விழா!

Share

திருகோணமலையில் பல்லின கலை இலக்கிய விழா!

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா (27) மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டம் என்பது பல்லின மக்கள் ஓரளவு சரிசமமாக வாழும் மாவட்டமாகும்.நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் வகையில் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகம் இந்நிகழ்வை நடாத்துவதற்கான நிதி ஏற்பாடுகளை வழங்கியிருந்தது.இதன் மூலம் நல்லிணக்கத்தை மேலும் வலுப்படுத்துவதே இதன் மூல நோக்கமாக அமைவதாக அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.
கயிறு இழுத்தல், முட்டி உடைத்தல், தலையணை அடி, சங்கீத கதிரை உள்ளிட்ட பல போட்டிகள் நடாத்தப்பட்டதுடன் பரிசில்களும் வழங்கி் வைக்கப்பட்டன.
சிங்கள, தமிழ், இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ சமயங்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இதன்போது அரங்கேறின.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி, மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், சக உத்தியோகத்தர்கள் என  பலரும் கலந்து கொண்டனர்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...