வடமராட்சியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இறுதிப் போரில் உயிர்நீத்த தமிழ் உறவுகளை நினைவேந்தும் ‘முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்’ வார நிகழ்வு யாழ்., வடமராட்சி, பருத்தித்துறை – முனைப் பகுதியில் நடைபெற்றது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை 4 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதில் பருத்தித்துறை நகர சபையின் தலைவர் யோ.இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.சா. அரியகுமார், பருத்தித்துறை நகர சபை உறுப்பினர்கள், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் உயிர்நீத்த உறவுகள் நினைவாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் இறுதியில் ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ வழங்கப்பட்டது.

IMG 8831

#SriLankaNews

Exit mobile version