மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

download 19 1 1

மன்னாரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

மன்னார் மாவட்டத்தில்  முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செற்றிட்டம் நேற்று  காலை 8 மணிமுதல் மன்னார் மாவட்ட வைத்தியசாலை முன்பாக இடம்பெற்றது.
இதன் பொழுது மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் வீடுகளிற்கு சென்று அரிசி விறகு என்பன திரட்டப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி ஆக்கப்பெற்று பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டதோடு இனப்படுகொலை இடம்பெற்றவேறை மக்களின் அடிப்படை ஆதாரமாக காணப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.அதிகளவான மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கஞ்சியை அருந்தி சென்றனர்.
மன்னார் மாவட்டத்தில் மக்கள் பேராதரவினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.தொடர்சியாகவவுனியா மாவட்டத்தில் வவுனியா தமிழ் மகாவித்தியாலயம் முன்பாக மதியம் 12:30 மணிமுதல் கஞ்சி விநியோகம் முன்னெடுக்கபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#srilankaNews
Exit mobile version